போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய 2 பேர் கைது

போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-08-30 00:33 IST

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சுந்தரம் மகன் தினேஷ்குமார்( வயது 25). டிரைவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்(52) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தரகம்பட்டி பகுதியில் இருந்து ரெட்டியபட்டிக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது ரெட்டியப்பட்டி குஜிலியம்பாறை பிரிவு சாலையில் சென்று கொண்டு இருந்த போது, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பாலவிடுதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி தலைமையிலான போலீசார் தினேஷ்குமார் தலைக்கவசம் அணியாமல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமாரும், ரவிச்சந்திரனும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்