பேட்டையில் மோட்டார்சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
பேட்டையில் மோட்டார்சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்;
பேட்டை:
பேட்டையில் மோட்டார்சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருட்டு
நெல்லையை அடுத்த பேட்டை சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 62). கடந்த வாரம் இவர் வீட்டின் அருகே தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தியிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து பேட்டை குற்றப்பிரிவு போலீசில் பரமசிவம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
2 பேர் கைது
அப்போது பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அதே பகுதி கக்கன்ஜி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுடலைமணி (வயது 22) ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளை திருடியது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சிறுவனை பாளையங்கோட்டை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். சுடலைமணியை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.