தம்பதியை தாக்கிய 2 பேர் சிக்கினர்

கல்லிடைக்குறிச்சியில் தம்பதியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-07-02 04:16 IST

அம்பை:

கல்லிடைக்குறிச்சி இசக்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசெல்வி (வயது 23). இவர் நாய் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி கோட்டை தெருவை சேர்ந்த சுடலைமுத்து (22), குறிஞ்சிபாறை தெருவை சேர்ந்த முத்துராமன் (19) ஆகியோர் அந்த வழியாக சென்றபோது, சிவசெல்வி வளர்க்கும் நாய் குரைத்ததால் அதை அடிக்க சென்று உள்ளனர். இதனை சிவசெல்வி தட்டிக்கேட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுடலைமுத்து, முத்துராமன் ஆகிய இருவரும் சேர்ந்து, சிவசெல்வி, அவருடைய கணவர் கணேசன் (24) ஆகியோரை அவதூறாக பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவசெல்வி கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுடலைமுத்து, முத்துராமன் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்