கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-06-22 00:39 IST

கூடங்குளம்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த மாயாண்டி (வயது 40) என்பவரை கூடங்குளம் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து ராதாபுரம் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. அதன்பேரில் கூடங்குளம் போலீசார் மாயாண்டியை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

அதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு ஆடு திருட்டில் ஈடுபட்ட வழக்கில் கூடங்குளம் புதுகுடியிருப்பை சேர்ந்த சரத்குமார் (29) என்பவரை திசையன்விளை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் அவருக்கும் ராதாபுரம் கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து திசையன்விளை போலீசார் சரத்குமாரை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்