2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு;
திருப்பூர்
திருப்பூர் காவேரிநகர் ஓடக்காட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் திருடிய கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த பூவரசன் என்பவரை கடந்த மே மாதம் 1-ந் தேதி வடக்கு போலீசார் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர். பூவரசன் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார். அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள பூவரசனிடம் நேற்று ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை போலீசார் வழங்கினார்கள்.
இதுபோல் ஆண்டிப்பாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த வீரய்யா என்கிற தர்மா (வயது 25) என்பவர், சசிக்குமாருக்கு கொலைமிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக தெற்கு போலீசார் தர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவரை ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள தர்மாவிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 30 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
----------------