போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
கோவையில் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;
கோவையில் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
போதை மாத்திரை விற்பனை
கோவையில் போதை பழக்கத்துக்கு ஆளான சில இளைஞர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வரு கின்றனர்.
எனவே அதுபோன்ற மாத்திரைகளை டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி விற்பனை செய்யக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் சொக்கம்புதூரில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி விற்பதாக செல்வ புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்றுமுன்தினம் அங்கு சோதனை நடத்தினர்.
கைது
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரி வித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சோதனையிட்ட போது அவர்கள் 2 பேரும் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 190 போதை மாத்திரைகள் பறிமுதல் செய் யப்பட்டன.
விசாரணையில் அவர்கள் கோவை கரும்புக்கடை சலாபத் நகரை சேர்ந்த நவாஸ் (வயது 29), உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த செரீப் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சா விற்றவர் சிக்கினார்
இதேபோல், கோவை சரவணம்பட்டி போலீசார் நேற்று கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சங்கனூர் காமராஜபுரத்தை சேர்ந்த நவீன்குமார் (வயது20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.