நிலத்தகராறில் வாலிபரை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை

ராமநாதபுரம் அருகே நிலத்தகராறில் வாலிபரை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.;

Update:2023-06-16 00:15 IST

ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராசிக் முகம்மது கான் (வயது 39). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் கரீம் என்ற ஆசாத் (40) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி அப்துல் கரீம் என்ற ஆசாத் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த ராசிக் முகம்மது கான் இரும்பு கம்பியால் தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அப்துல் கரீம் என்ற ஆசாத் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து ராசிக் முகம்மதுகானை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா மேற்கண்ட ராசிக் முகம்மது கானுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.ஆயிரம் அபராதமும் அதனை கட்ட தவறினால் மேலும் 2 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்