20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி - முதல்-அமைச்சர் அறிவிப்பிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

அரசுப்பள்ளி மாணவர்களின கல்வி வளர்ச்சிக்கு மடிக்கணினி பெரிதும் உதவியாக உள்ளது என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-28 12:50 IST

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிகணினி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்பிற்குரியது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது. அவர்களின் கணினி பயன்பாட்டுத் திறனையும், படைப்பாக்கத் திறனையும் மேம்படுத்துகிறது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின கல்வி வளர்ச்சிக்கு மடிக்கணினி பெரிதும் உதவியாக உள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படையில் தற்பொழுது 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

இந்த மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது கண்டனத்திற்குரியது. இது அவரின் மாணவர் விரோத மனநிலையையே காட்டுகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்