200 இளைஞர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் 200 இளைஞர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்;

Update:2023-07-09 03:00 IST

கோவையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் இளைஞர்கள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் 200 இளைஞர்கள் அ.தி.மு.க. வில் சேர்ந்தனர்.

அவர்களுக்கு சால்வை அணிவித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரவேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


நாங்கள் 5 ஆண்டுகளில் 50 ஆண்டு வளர்ச்சியை கொடுத்தோம். இதனால் தான் கோவை மாவட்ட மக்கள் 10 தொகுதியிலும் வெற்றியை கொடுத்தார்கள்.

ஆனால் தி.மு.க. ஆட்சியில் எந்த புதிய திட்டங்களும் கொண்டு வரவில்லை. சொத்து வரி, மின்கட்டண உயர்வு போன்றவை மக்களை அதிகமாக பாதித்து உள்ளது.

எனவே எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.


குனியமுத்தூரில் கல்லூரி சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்தனர்.

அவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசும், கல்லூரி நிர்வாகமும் நிவாரணம் வழங்க வேண்டும். விதிமுறைக்கு உட்பட்டு இது போன்ற கட்டிடங்கள் கட்டப்படுகிறதா? என்று கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்.

கோவை சரக டி.ஐ.ஜி.க்கு அரசு தரப்பில் பல அழுத்தங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., மாநகர துணை செயலாளர் துரைசாமி, பொருளாளர் பார்த்திபன், தோப்பு அசோகன், பகுதி செயலாளர்கள் காட்டூர் செல்வராஜ், ராஜ்குமார், சிவக்குமார் மற்றும் சிங்கை பாலன், சிங்கை முத்து, பப்பாயா ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்