திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நிறுத்த திமுகவினர் முற்பட்டனர் நவநீதகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நிறுத்த திமுகவினர் முற்பட்டனர் -என்று அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2017-02-19 13:18 GMT
சென்னை,

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட ரகளையின் காரணமாக சட்டசபை போர்க்களமானது. சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் சட்டை கிழிந்தது. தி.மு.க. உறுப்பினர் களை வெளியேற்றிய பின் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.  நம்பிக்கை வாக்கெடுப்பு முறை, சபாநாயகர் நடவடிக்கைகள் என சட்டசபை நிகழ்வுகள் குறித்த விமர்சனங்களும் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழக சட்டசபைக்கான மாண்பை திமுகவினர் சீர்குலைத்துவிட்டனர். திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நிறுத்த திமுகவினர் முற்பட்டனர். சட்டசபையில் சபாநாயகர் சட்டவிதிகளின்படி செயல்பட்டார். தீர்மானம் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்