அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கழிவுநீரை சுத்திகரிக்க கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுமா?

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் திரவ மருத்துவ கழிவுகளை சுத்திகரிப்பதற்கு சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கக்கோரி திருவான்மியூரை சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Update: 2017-04-28 16:45 GMT

சென்னை,

இந்த வழக்கு நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஜவஹர்லால் சண்முகம் நேரில் ஆஜராகி, ‘தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் துணி துவைக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. துணி துவைக்கும்போது வெளியேற்றப்படும் கிருமிகள் நிறைந்த கழிவுநீரை சுத்திகரிக்க எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை’ என்றார்.

இதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் துணிகளை துவைக்கும்போது வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படுமா? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்