திமுக,காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கோரினார் மீராகுமார்

குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீராகுமார், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்.

Update: 2017-07-01 14:18 GMT
சென்னை,

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் மீராகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.  இதனை தொடர்ந்து அவர் தனக்கு ஆதரவு தர கோருவதற்காக சென்னை வந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு கோர வந்துள்ளேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில், மீராகுமார், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். திமுக,காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் மீராகுமார் ஆதரவு கோரினார்.

அதனைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

மீராகுமாரை பொது வேட்பாளராக கருதி வெற்றி பெறச்செய்ய வேண்டும்.  தற்போது நெருக்கடியான நிலையில் நாடு இருக்கிறது. ஊழல், வறட்சியை ஒழிக்க வந்தவர்கள் மதசார்பின்மையை ஒழிக்க பார்க்கின்றனர். வி.வி.கிரி, கே.ஆர்.நாராயணன்,பிரதீபா பட்டீல் ஆகியோர் ஜனாதிபதியாக காரணமாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து மீராகுமார் கூறுகையில்,

கொள்கை அடிப்படையிலேயே கட்சிகள் என்னை ஆதரிக்கின்றன.கடந்த காலங்களில் நடந்த ஜனாதிபதி தேர்தல் போல் இது இல்லை. நாம் அனைவரும் கொள்கை ரீதியிலான போட்டியில் இறங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்