மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடை சட்டத்தை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-07-15 22:30 GMT
சென்னை,

சென்னையைச் சேர்ந்த சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதித்து 2013-ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.ஆனால் சென்னை, திருவள்ளூர், கடலூர், மதுரை, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி மனிதக் கழிவுகளை அகற்றிய போது 30 பேர் பலியாகி உள்ளனர். 

மேலும் செய்திகள்