தமிழன் தலையில் ”கோமாளிக்குல்லா”: நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கடும் விமர்சனம்

தமிழன் தலையில் கோமாளிக்குல்லா என்று நடிகர் கமல்ஹாசன் அதிமுக அணிகள் இணைப்பு விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

Update: 2017-08-21 10:42 GMT
சென்னை

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், ஊழல் குறித்தும் அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், பிளவு பட்ட அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

 கமல்ஹாசன்  டுவிட்டரில் கூறியிருப்பதவது:- ''காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா'' என்று விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகள்