தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2017-08-23 07:30 GMT
சென்னை

சென்னை வானிலை மையம் கூறியதாவது:-

தெலங்கானா முதல் குமரி வரை உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வலுவிழந்துள்ளது.தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

மேலும், இதுவரை தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழையால் 22.1 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் கடற்காற்றின் திசையைப் பொறுத்து, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்