ஆர்.கே. நகரில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் முன்னிலை, சுற்றுவாரியாக வாக்குகள் விபரம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Update: 2017-12-24 08:03 GMT

சென்னை,


ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானது. இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் ஆகியோரும், சுயேட்சை வேட்பாளராக சசிகலா உறவினர் டி.டி.வி. தினகரன் உள்பட 59 பேர் தேர்தல் களத்தில் நின்றனர்.

கடந்த முறை பணப்பட்டுவாடா புகார் விஸ்வரூபம் எடுத்தது போன்று இந்த முறையும் பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுக்கள் அளித்தன. பணப்பட்டுவாடா புகார் காரணமாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற சூழ்நிலை ஏற்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் 21-ந்தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது

பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்து சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் பெரும்வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். 

முதல் சுற்று

டி.டி.வி.தினகரன்-5,339
அ.தி.மு.க.-2,738
தி.மு.க.-1,182
நாம் தமிழர்-258
பா.ஜ.க.-66
நோட்டா-122

2-வது சுற்று

டி.டி.வி.தினகரன்-10,421
அ.தி.மு.க.-4,521
தி.மு.க.-2,300
நாம் தமிழர்-459
பா.ஜ.க.-125
நோட்டா-208

3-வது சுற்று

டி.டி.வி.தினகரன்
-15,868
அ.தி.மு.க.-7-,033
தி.மு.க.-3,691
நாம் தமிழர்-737
பா.ஜ.க.-220
நோட்டா-333

4-வது சுற்று 

டி.டி.வி.தினகரன்-20,298
அ.தி.மு.க.-9,672
தி.மு.க.-5,032
நாம் தமிழர்-962
பா.ஜ.க.-318
நோட்டா-493

5-வது சுற்று

டி.டி.வி.தினகரன்
-24,132
அ.தி.மு.க.-13,057
தி.மு.க.-6,606
நாம் தமிழர்-1,245
பா.ஜ.க.-408
நோட்டா-640

6-வது சுற்று

டி.டி.வி.தினகரன்-29,255
அ.தி.மு.க.-15,181
தி.மு.க.-7,986
நாம் தமிழர்-1,509
பா.ஜ.க.-485
நோட்டா-798

7-வது சுற்று 

டிடிவி தினகரன் (சுயேச்சை) - 34,346

மதுசூதனன் (அதிமுக) - 17,471

மருதுகணேஷ் (திமுக) - 9,206

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 1,732

கரு. நாகராஜன் (பாஜக)- 519

நோட்டா- 935



மேலும் செய்திகள்