பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளது-அருண் ஜெட்லி

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். # ArunJaitley # TNnews

Update: 2018-01-14 15:01 GMT
சென்னை,

சென்னையில் துக்ளக் வார இதழின் 48-வது ஆண்டு விழாவில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது

பணமதிப்பு நீக்கம், கறுப்பு பண ஒழிப்பு மூலம் நாட்டை பாஜக அரசு காப்பாற்றியுள்ளது. ஒரு குடும்பமே நாட்டை ஆட்சி செய்து கைப்பற்றி வைத்திருந்தது. மோடி ஆட்சிக்கு முன் இருந்த அரசு மக்களுக்கு உதவாத அரசாக செயல்பட்டது.

மூத்த பத்திரிக்கையாளர் சோ விட்டு சென்ற பணிகளை குருமூர்த்தி போன்ற சிலரால் மட்டுமே கையாள முடியும். ஊழல் ஒழிப்புக்கான மிக முக்கிய நடவடிக்கை தான் பணமதிப்பு நீக்கம். கடினமான மனநிலையில் தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. நாட்டில் எதிர்ப்புணர்வை தூண்டுவது சில சூழ்ச்சி சக்திகளே. நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என கூக்குரலிவிடுபவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு கரம் நீட்டுகிறது.

பொருளாதாரத்தில் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் சமூக, பொருளாதார கட்டமைப்பில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும்.

பொருளாதார வளர்ச்சி பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்