விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.;

Update:2026-01-10 10:35 IST

சென்னை,

கடந்த செப். 27ம் தேதி கரூரில் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கு முன்பாக, கடந்த நவ.25-ம் தேதி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் புதுடெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். இவர்களோடு, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர்.

டிச.4-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் அப்போது இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அதில், ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் கரூர் எடுத்து சென்றுள்ளனர்.பனையூரில் இருந்து கரூர் எடுத்து சென்ற சிபிஐ அதிகாரிகள், பேருந்தில் சோதனை செய்து வருகிறார்கள். விஜய் பிரசார வாகனத்தின் டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்