குரங்கணி காட்டுத் தீ உயிரிழப்பு:கமலஹாசன் நேரில் ஆறுதல்

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த, சென்னையை சேர்ந்த அனுவித்யா மற்றும் நிஷாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமலஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #TheniForestfire #KamalHaasan

Update: 2018-03-17 08:20 GMT
சென்னை,

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்காக சென்றிருந்த குழுவினர் சிக்கினர். அவர்களில் சம்பவ இடத்திலேயே 9 பேர் கருகி இறந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சென்னையைச் சேர்ந்த நிஷா, அனுவித்யா, ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த நிலையில்  குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த, சென்னையை சேர்ந்த அனுவித்யா மற்றும் நிஷாவின் குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தேவை. இந்த விபத்தை பாடமாக கொண்டு எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்