100 மாணவர்கள் கண் பாதிப்பு பள்ளி தாளாளர் மற்றும் ஒலி, ஒளி அமைப்பாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு

நெல்லை ஏர்வாடியில் அதிக சக்தி கொண்ட மின்விளக்குகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு பள்ளி தாளாளர் மற்றும் ஒலி, ஒளி அமைப்பாளர் ரமேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-03-17 11:49 GMT
நெல்லை

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இதில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. நேற்று இந்த பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது  மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடத்த மேடை அமைக்கப்பட்டு இருந்தது.  அந்த மேடையில் அதிக வெளிச்சத்திற்காக  சக்தி வாய்ந்த சோடியம் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் ஏதோ கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு இருந்த 60 மாணவர்கள் உள்பட  100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண்ணில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இன்று   மாணவ மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.  அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின்  பொறுப்பாளருக்கும் இதே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிக வெளிச்சத்தால்  மாணவ மாணவிகள் கண்  பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக டாக்டர் தெரிவித்து உள்ளனர். இது  குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக  பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு உள்ளார்.  பள்ளி தாளாளர் மற்றும் ஒலி, ஒளி அமைப்பாளர் ரமேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்