மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் குறைவு -முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் குறைவு என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly #EdappadiPalanisamy

Update: 2018-03-22 07:13 GMT
சென்னை

கடைசி நாளான இன்று  தமிழக சட்டசபையில்  அனல் பறக்கும் வாதங்கள் நடைபெற்றது. 

மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கையில் தமிழகத்தில் தொழில் குறைந்து வருவதாகவும், அண்டை மாநிலங்களில் வளர்ந்து வருவதாகவும் உள்ளது. தென் மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு எந்த சாலைகளும் அமைக்கப்படவில்லை, 4 ஆண்டுகளாக அறிக்கையில் மட்டுமே உள்ளது என   துரைமுருகன் கூறினார்.

உணவு தானிய விளைச்சலில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்  என வேளாண்துறையில் வளர்ச்சி இல்லை என கூறிய துரைமுருகன் கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கூறும்போது:-

வளம் அதிகரித்ததால்தான் மீண்டும் எங்களை மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர், உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இது வளம் அல்லவா?.

திமுக ஆட்சியில் ரவுடிகளை பிடிக்கவில்லை, ஆனால் நாங்கள் ரவுடிகளை பிடித்து, தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றியுள்ளோம்.

மதுரவாயல்- சென்னை துறைமுகம் பறக்கும் சாலை விரைவில் செயல்படுத்தப்படும். 

ரவுடிகள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் சூழ்நிலையில், சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதாக அரசு சொல்கிறது என துரைமுருகன் கூறினார்.

 சட்டப்பேரவையில் ரவுடிகள் குறித்து திமுக உறுப்பினர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், ரவுடிகள் பயந்து பக்கத்து மாநிலத்துக்கு ஓடி விட்டார்கள், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகம் தற்போது அமைதி பூங்காவாக உள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார். 

ரவுடிகள் திடீரென உருவாகுவது இல்லை, நாங்கள் எடுத்த நடவடிக்கை காரணமாக பிடிபட்டுள்ளார்கள் என முதல்வர் பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகள்