மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கும்படி தனியார் கல்லூரி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

Update: 2018-05-11 20:34 GMT
சென்னை, 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில், முதலாம் ஆண்டு பி.எட். தேர்வை 37 மாணவர்கள் எழுதியுள்ள நிலையில், ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் எங்களது கல்லூரிக்கு இணைவிப்பு வழங்கவில்லை எனக்கூறி, அந்த மாணவர்களை 2-ம் ஆண்டுக்கான தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கல்லூரி சரியாக செயல்படவில்லை, போலியான ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறது. பல்கலைக்கழக நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யவில்லை. கல்லூரியில் தரம் இல்லை என்றால், தரமான ஆசிரியர்களை உருவாக்க முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்