தமிழக கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி மகள் திருமண வரவேற்பு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் வாழ்த்து

தமிழக கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

Update: 2018-06-23 22:15 GMT
சென்னை,

தமிழக கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. மணமக்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் வாழ்த்தினார்.

தமிழக காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றும் எம்.ரவி-தெய்வம் ரவி ஆகியோரின் மகள் அனன்யாவுக்கும், பொதுப்பணித்துறையில் துணை கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றும் சி.மோகன்- பரிமளா தேவி ஆகியோரது மகன் கவுஷிக்கிற்கும் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் திருமணம் நடந்தது.

மணமகள் அனன்யா அமெரிக்காவில் எம்.எஸ். பட்டம் பெற்றவர். மணமகன் கவுஷிக் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். தற்போது இவர் இளம் தொழில் அதிபராக உள்ளார்.

இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நேற்று மாலை நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எம்.சி.சம்பத், பா.பென்ஜமின், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவருடைய மருமகன் சபரீசன், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன், தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., தே.மு.தி.க. மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், தினத்தந்தி இயக்குனர் சி.பால சுப்பிரமணியன் ஆதித்தன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெ.இறையன்பு, டாக்டர் சந்திரமோகன், விக்ரம் கபூர், மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் வெ.திருப்புகழ், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் த.கார்த்திகேயன், உ.சகாயம் ஆகியோர் வாழ்த்தினர்.

தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழக போலீஸ் அதிகாரிகள் ஸ்ரீதர், சேஷசாயி, தாமரைக்கண்ணன், சுதாகர், மோகன்ராஜ், முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர், கவிஞர் வைரமுத்து, திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், நடிகர்கள் விஜயகுமார், விவேக், மயில்சாமி, தொழில் அதிபர்கள் ராஜா சங்கர், பழனி ஜி.பெரியசாமி, நல்லி குப்புசாமி, தினமலர் இயக்குனர் (தொழில்நுட்பம்) ஆதிமூலம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், ஜெயா தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் ஜெயராமன், முகச்சீரமைப்பு நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி உள்பட பல முக்கிய பிரமுகர்களும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்