தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்பது தவறான கருத்து - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்பது தவறான கருத்து என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #Jayakumar

Update: 2018-07-11 06:10 GMT
சென்னை

 மாநில அரசுகள்  தொழில் சீர்திருத்தங்களை மேற்கொண்டதை அடிப்படையாக கொண்டு உலக வங்கி மற்றும் தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை (DIPP) இணைந்து நடத்திய ஆய்வில் 

தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் ஆந்திராவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. தெலுங்கானா  2-ஆம் இடத்தில் உள்ளது. 

அரியானா, ஜார்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே, 3,4,5 ஆகிய இடங்களில் உள்ளன. முதல் 10 இடங்களுக்குள் சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான்  ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழகம் இந்த பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லி, 23-வது இடத்தில் உள்ளது என கூறப்பட்டு உள்ளது

இது குறித்து பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்பது தவறான கருத்து. தொழில் செய்வதற்கான உகந்த மாநிலம் என்பதை தமிழகம் தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. தொழில் முனைவோர் அதிகம் வருவது தமிழகத்திற்கே. டாஸ்மாக் நேரம் குறைப்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கும்  என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்