கருணாநிதி உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நடிகர் அஜித்குமார் நலம் விசாரித்தார்

கருணாநிதி உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நடிகர் அஜித்குமார் நலம் விசாரித்தார்.

Update: 2018-08-01 15:25 GMT


சென்னை, 


தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் 27–ந் தேதி இரவு அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர். இது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து செல்கின்றனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக நடிகர் அஜித்குமார் வந்தார். ஆஸ்பத்திரிக்கு உள்ளே சென்ற அஜித்குமார் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவரிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 
காலையில் நடிகர் விஜய் கருணாநிதி உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்.

மேலும் செய்திகள்