தென்னிந்தியாவில் தமிழகத்தில் இந்தி மொழி கற்போர் எண்ணிக்கை அதிகம்

தென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிகபட்சமாக ஆண்டிற்கு 2.5 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வை எழுதி வருகிறார்கள் என சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Update: 2018-08-02 10:25 GMT
இந்தி பேசாத தென்னிந்திய மாநிலங்களில்  இந்தி மொழியை வளர்க்க வேண்டும் என்பதற்காக 1918 ஆம் ஆண்டில் சென்னையில் இந்தி பிரசார சபாவை துவக்கினார் மகாத்மா காந்தி.  தற்போது இந்த அமைப்பு நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தமிழகத்தில் இந்தி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை விட தமிழகத்தில் இந்தி மொழி கற்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் என இரு முறை நடக்கும் தேர்வை மாணவர்கள் அதிகளவில் எழுதுகிறார்கள் என கூறுகிறார் இந்தி பிரசார சபாவின் பொதுச்செயலாளர் ஜெயராஜ்.

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையத்திற்கு அரசு பள்ளிகள் ஒதுக்கப்படுகின்றன எனவும் ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் தமிழகத்தில் அரசு பள்ளிகளை மையங்களாக தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

மருத்துவர்கள், பொறியாளர்கள், ஐ.டி., துறையில் பணியாற்றும் உயர் அலுவலர்கள் என பல்வேறு துறையினரும் இந்தி மொழியை அதிகம் கற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்