பக்ரைனிலிருந்து மீன் பிடிக்க சென்ற 30 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

பக்ரைனிலிருந்து மீன் பிடிக்க சென்ற 30 தமிழக மீனவர்கள் சவுதி அரேபிய படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

Update: 2018-10-16 23:25 GMT
சென்னை,

பக்ரைன் நாட்டிலிருந்து மீன் பிடிக்க சென்ற கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த 30 மீனவர்கள் சவுதி அரேபிய படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். பக்ரைனிலிருந்து அல் மோஜ், பெய்ரூட் உள்ளிட்ட 6 படகுகளில் சென்ற 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவரம் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணிக்கு தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பக்ரைனிலுள்ள இந்திய தூதருக்கு அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களில் பெய்ரூட் படகில் இருந்த அமலதாஸ் சகாயராஜ், கிராஸ்லின் சகாயராஜ், கோபி முத்துகுமாரசாமி, பாரதி தண்டபாணி, நந்தகுமார் குட்டியாண்டி மற்றும் அல் மோஜ் படகில் இருந்த அந்தோனி மைக்கேல் ஆசீர்வாதம், அஜய் பாலகிருஷ்ணன், வைரமூர்த்தி வைரமுத்து, குணசேகர் ஏழுமலை, மதியரசன் செல்வம் ஆகிய பெயர்கள் மட்டும் கிடைத்துள்ளன. மற்ற விவரங்களுக்காக ஜஸ்டின் ஆன்டணி இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வருகிறார்.

இது குறித்து ஜஸ்டின் ஆன்டணி கூறும்போது, ‘நம்முடைய மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதை தடுப்பதற்காக அந்தந்த அரசுகள் எல்லையில் ரோந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், நம் மீனவர்களுக்கு சர்வதேச அடையாள அட்டை வழங்க வேண்டும். 

மேலும் செய்திகள்