பிறந்தநாளில் வாழ்த்து பெறுவதை விட பிறக்க போகும் புதிய தமிழகத்திற்கு வாழ்த்து சொல்லவே விரும்புகிறேன் - கமல்ஹாசன்

பிறந்தநாளில் வாழ்த்து பெறுவதை விட பிறக்க போகும் புதிய தமிழகத்திற்கு வாழ்த்து சொல்லவே விரும்புகிறேன் - கமல்ஹாசன்

Update: 2018-11-04 11:15 GMT
சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வரும் 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 

இந்நிலையில்  பிறந்தநாளில் வாழ்த்து பெறுவதை விட பிறக்க போகும் புதிய தமிழகத்திற்கு வாழ்த்து சொல்லவே விரும்புகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் செய்ய வேண்டிய 6 பணிகள் குறித்தும் கமல் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம்.

அதற்கு பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்ததானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்