இரவு பட்டாசு வெடிக்கும் நேரம் துவங்கியது: வண்ணக்கோலம் பூண்டது வானம் !

பட்டாசு வெடிப்பதற்கான 2-ஆம் கட்ட நேரம் துவங்கியதும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பட்டாசுகளை வெடித்தனர்.

Update: 2018-11-06 13:44 GMT
சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, தீபாவளி திருநாளில் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தடையை மீறி, பட்டாசு வெடித்தவர்களுக்கு கெடுபிடிகள் தரப்பட்டதால், தீபாவளி பகலில் களையிழந்தது. இந்த நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான 2- ஆம் கட்ட நேரம்(7 மணி முதல்  8) துவங்கியதும் மக்கள் ஆர்வத்துடன் பட்டாசுகளை வெடிக்கத்துவங்கினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பட்டாசுகளை வெடிப்பதை காண முடிந்தது. வானில் பறந்து வெடிக்கும் பேன்சி ரக பட்டாசுகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் வெடித்தனர். இதனால், வானம் வண்ணக்கோலம் பூண்டது. 

மேலும் செய்திகள்