சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.80.73க்கு விற்பனை

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.80.73க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2018-11-11 03:11 GMT
சென்னை,

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் இவற்றின் விலை தொடர்ந்து கிடுகிடுவென அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

இந்த நிலையில் கடந்த 18ந்தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய தொடங்கியது.  தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், சீராக இவற்றின் விலை குறைந்தது வாகன ஓட்டிகள் இடையே நிம்மதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 17 காசுகள் குறைந்து ரூ.80.73க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோன்று டீசல் விலை 13 காசுகள் குறைந்து ரூ.76.59க்கு விற்கப்படுகிறது.

மேலும் செய்திகள்