சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Update: 2018-11-20 10:01 GMT
சென்னை,

 சென்னையில் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் கனமழை பெய்யும்  என சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது.

இன்று பிற்பகலில்  சென்னையில் பலத்த மழை பெய்ய தொடங்கியது தொடர்ந்து பெய்து வருகிறது.  

அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, வேளச்சேரி, தரமணி, நங்கநல்லூர், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. 

 சென்ட்ரல், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அயனாவரம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை  பெய்து வருகிறது.

காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் மற்றும் புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழை காரணமாக, காரைக்காலில் பள்ளி முடியும் நேரத்திற்கு முன்பாக, மாணவர்களை பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்ப அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

தற்போது டெல்டாவில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்