நவ.30 மற்றும் டிச.1 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

வரும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Update: 2018-11-27 06:00 GMT
சென்னை,

வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி அரபிக் கடலுக்கு சென்று விட்டது.
அதன் பிறகு தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது. 

மழை படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகம்-புதுவையில் வறண்ட வானிலை நிலவுகிறது. இது மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வருகிற  30-ந்தேதியும், டிசம்பர் 1-தேதியும்   தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக   இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்