நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரெயிலில் சரக்கு கட்டணம் இல்லை - ரெயில்வே நிர்வாகம்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரயிலில் சரக்கு கட்டணம் இல்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2018-11-27 15:03 GMT


சென்னை,


கஜா நிவாரணப் பொருட்களுக்கு ரயிலில் சரக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க ரெயில்வே அமைச்சர் கோயலுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். இதனையடுத்து புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ரெயிலில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல ரயிலில் சரக்கு கட்டணம் கிடையாது.  தமிழகத்திற்குள்ளும் பிற மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு டிச.10 வரை இந்த விலக்கு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்