முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மேலும் பலர் நிதியுதவி எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கினார்கள்

‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Update: 2018-11-30 19:08 GMT
சென்னை, 

‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தொழிலதிபர்களும், பொதுமக்களும் நேரிலும், ஆன்-லைன் மூலமும் புயல் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், நேற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பலர் நிதி அளித்தனர். பி.ஏ. புட்வேர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.வி.குமரகுருபரசாமி ரூ.25 லட்சம், கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் தலைவர் ராம.ராமநாதன் ரூ.23 லட்சம், கிளாரியன் பிரசிடென்ட் ஓட்டல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஏ.அபுபக்கர் ரூ.10 லட்சம், பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் தலைமை இயக்கக அதிகாரி சங்கர நாராயணன் ரூ.10 லட்சம், பொன்பூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.பொன்னுசாமி ரூ.10 லட்சம், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் ரூ.1 லட்சம், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் கோ.சமரசம் ரூ.1 லட்சம் என குறிப்பிட்ட தொகைகளுக்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தனித்தனியாக வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்