சென்னையில் இரவு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் இரவு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2018-12-03 13:37 GMT
சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நாளை செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சென்னையில் நுங்கம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், சேப்பாக்கம், விருகம்பாக்கம், பெரம்பூர், கொடுங்கையூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது.  இதேபோன்று காஞ்சீபுரம், நாகை, புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இரவு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்