கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வந்தால் தஞ்சை பெரியகோவிலில் தியான பயிற்சி நடத்தப்படும் ரவிசங்கர் குருஜி பேட்டி

கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வந்தால் தஞ்சை பெரியகோவிலில் தியான பயிற்சி நடத்தப்படும் என்று ரவிசங்கர் குருஜி கூறினார்.

Update: 2018-12-08 22:45 GMT
தஞ்சாவூர்,

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி தலைமையில் தஞ்சை பெரியகோவிலில் 2 நாட்கள் தியான பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. ஆனால் இதற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து பெரிய கோவிலில் நடக்க இருந்த தியான பயிற்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நேற்று காலை 2-வது நாளாக இந்த தியான பயிற்சி நடந்தது. ரவிசங்கர்குருஜி தலைமையில் நடந்தது.

நிச்சயம் நடத்தப்படும்

தியான பயிற்சி முடிந்து வந்த ரவிசங்கர்குருஜி நிருபர்களிடம் கூறுகையில், “கோவிலில் தியானம் செய்வதற்கு தடை வாங்குகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. தியானம் செய்வதற்குத்தான் கோவில் உள்ளது. அந்த கோவிலில் தியானம் செய்வதற்கு தடை வாங்குவது யோசனை செய்ய வேண்டிய விஷயம். இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தால் பெரியகோவிலில் தியான பயிற்சி வகுப்பு நிச்சயமாக நடத்தப்படும்”என்றார்.

மேலும் செய்திகள்