வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-12-15 07:14 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றும், நாளையும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு  உள்ளது. மீனவர்கள் 16, 17, 18 ஆகிய தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் ஓங்கோல் - காக்கிநாடா இடையே 17-ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் “ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்