வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

ஆந்திர கடலோர பகுதிகளில் டிச.16,17ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-12-15 16:04 GMT
சென்னை,

வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே டிச.17ம் தேதி பிற்பகல் பெய்ட்டி புயல் கரையை கடக்கும்.  

ஆந்திர கடலோர பகுதிகளில் டிச.16,17ம் தேதிகளில் கனமழை பெய்யும். புயலால் கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஏனம் மாவட்டமும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. புயலுக்கு பேத்தாய் என பெயரிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்