ரேசன் கடைகளில் கண்காணிப்பு கேமரா; 2 வாரங்களில் அரசுக்கு பரிந்துரை அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

ரேசன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து 2 வாரங்களில் அரசுக்கு பரிந்துரை அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2018-12-20 10:34 GMT
சென்னை,

ரேசன் பொருட்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர பொதுமக்களுக்கு அரசால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், பல இடங்களில் மக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என புகார் எழுந்தது.

ரேசன் பொருட்கள் மக்களுக்கு சென்று சேருவதற்கு முன் வேறு இடங்களுக்கு கடத்தப்படுகிறது என்றும் புகார் கூறப்படுகிறது.  இந்த நிலையில், ரேசன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து 2 வாரங்களில் அரசுக்கு பரிந்துரை அனுப்ப வேண்டும் என கூட்டுறவு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்த பரிந்துரையை செயல்படுத்துவது தொடர்பாக ஜனவரி 10ந்தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ரேசன் பொருட்கள் கடத்தலை தடுக்க வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் திட்டம் உள்ளதா? என்றும் அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் செய்திகள்