அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-21 04:16 GMT
சென்னை,

முன் அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையில், முன் அனுமதியின்றியும் விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் போது அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் போது உயிரிழந்தால், பணி விதிகளின்படியே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்”  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்