மேகதாது விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிக்கின்றன - பொன்.ராதாகிருஷ்ணன்

மேகதாது விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிக்கின்றன என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-24 12:11 GMT
சென்னை,

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் கலந்து கொள்வது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.   உயர்மின் கோபுர விவகாரம் மத்திய அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

திமுக-காங். கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கவுள்ளது. பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தபோது கொள்ளை அடிக்க முடியவில்லை.  மேகதாது விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் நவராத்திரி சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிக்கின்றன. 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்