தமிழக சட்டசபையில் வருகிற ஜனவரி 8ந்தேதி ராமசாமி படையாச்சியின் உருவப்படம் திறக்கப்படும்

தமிழக சட்டசபையில் வருகிற ஜனவரி 8ந்தேதி ராமசாமி படையாச்சியின் உருவப்படம் திறக்கப்படும்.

Update: 2018-12-29 10:55 GMT
சென்னை,

தமிழக அரசு சார்பில் கடலூரில் சுதந்திர போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு நினைவுமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அகில இந்திய வன்னியகுல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கடந்த அக்டோபர் இறுதியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்பொழுது, ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், பின்னர் அவருடைய அரசும் தான் வன்னியர் குல மக்களின் நலனுக்கு தொடர்ந்து செயலாற்றி கொண்டிருக்கிறது.

தேசப்பற்று கொண்டு மக்களுக்காக உழைத்து மறைந்த எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் விதமாக சட்டசபையில் அவருடைய முழு உருவப்படம் வைக்கப்படும் என பேசினார்.

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் வருகிற ஜனவரி 8ந்தேதி ராமசாமி படையாச்சியின் உருவப்படம் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்