ஜெயலலிதா மரணம் : விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என அமைச்சர் கூறியது வரவேற்கத்தக்கது- ஜெயக்குமார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைச்சர் சி.வி சண்முகம் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று கூறியது வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2018-12-31 09:35 GMT
சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்ற அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்து வரவேற்கத்தக்கது.  சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிட்டதால் தான் ரூ.1 கோடிக்கு மேல் செலவு வந்தது.

மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் தங்கவில்லை, சசிகலா குடும்பத்தினர் மட்டுமே தங்கியிருந்தனர்.  அமைச்சர்களுக்குள் பிளவு எதுவும் இல்லை, ஏற்படுத்தவும் முடியாது . அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம். சி.வி. சண்முகம்  சொன்ன கருத்தை  முன்னெடுத்து ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்