நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது -முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது என கவர்னர் உரைக்கு பதிலளித்து பேசும்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2019-01-08 07:40 GMT
சென்னை

கவர்னர்  உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசும் போது கூறியதாவது:-

தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது . முதியோர்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஜாதி, மத கலவரம் குறைந்து, சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பிற்காக பொது இடங்களில் கேமராக்கள் பொருத்துவதில், இந்தியாவில் தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது.
கோவில்களில் சிலைகளை பாதுகாக்க ரூ.308 கோடி செலவில் 3087 பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவது குறித்து விரிவான சாத்திய கூறுகளுடன் திட்ட அறிக்கை தயாராகி வருகிறது.
கடந்தாண்டைவிட கூடுதலாக 2.41 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்துள்ளனர்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு இப்போதே 27 நிறுவனங்களுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது; நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டதன் மூலம் ரூ.44,000 கோடி முதலீட்டை தமிழகம் பெறும். நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்