முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் மரியாதை
முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை,
முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, நடிகர் சங்க வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.