நடைமுறை அறிவாற்றல் இல்லாதவர் ஸ்டாலின்; தமிழிசை சவுந்தரராஜன்

நடைமுறை அறிவாற்றல் இல்லாதவர் ஸ்டாலின் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

Update: 2019-01-27 05:14 GMT
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். 

இந்த நிலையில், பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ள செய்தியில், எய்ம்ஸ் மருத்துவமனை வருவதாக கூறுவது பொய் என்ற மு.க. ஸ்டாலின், தற்போது தாமதம் என கூறுகிறார்.

பிரதமர் மோடி பதவியேற்றபொழுது இந்தியாவில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளே இருந்தன.  ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை வழங்க வேண்டும் என்பதே மோடி அரசின் இலக்கு.

இந்த வகையில் 13 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு திட்ட அனுமதியுடன் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி செயல் வடிவம் பெற குறைந்தது 4 ஆண்டுகளாகும்.  இப்படிப்பட்ட நடைமுறை அறிவாற்றல் இல்லாதவர் பிரதமரை முட்டாள் என்கிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்