பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.73.14 ஆக விற்பனையாகிறது.

Update: 2019-02-15 01:27 GMT
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.  

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.14 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.44 காசுகளாகவும் உள்ளது. 

மேலும் செய்திகள்