பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

Update: 2019-02-20 00:56 GMT
சென்னை,

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும், எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இன்றி ஒரு லிட்டர் ரூ.73.72 ஆகவும், டீசல் விலையும் மாற்றம் எதுவும் இன்றி, நேற்றைய விலையான  ரூ.69.91-க்கே விற்பனையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்