பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

Update: 2019-02-24 01:39 GMT
சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. அந்த வகையில், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளன. 

அந்த வகையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் எவ்வித மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.74.08 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் எவ்வித மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ.70.32 காசுகளாகவும் உள்ளது.

மேலும் செய்திகள்