கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆட்சேபனை இல்லை: தமிழக தேர்தல் அதிகாரி தகவல்

கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமக்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2019-03-16 09:38 GMT
சென்னை,

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறிய மதுரை ஐகோர்ட்டு, அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறுகையில்,

"கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமக்கு ஆட்சேபனை இல்லை. கோவை எஸ்.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு இருந்தது. எஸ்.பி. விவகாரத்தில் தன்னிடம் அனுமதி பெற தேவையில்லை. நடவடிக்கை குறித்து அறிக்கை அளித்தால் போதும் எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்